News
கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது
SimpliCity News Team · 11 Nov 2022
கோவை: பார்க் பொறியியல் கல்லூரியானது கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கணியூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும்.
இது இந்தியாவின் ஐந்தாவது சிறந்த பல்கலைக்கழகமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு ஐஎஸ்ஓ 9002 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் விவசாய பொறியியல் துறையின் சார்பாக "விவசாயம் சார்ந்த துறையின் மேம்படுத்தப்பட்ட செயல்முறைகள்" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை 10 Nov 2022 அன்று கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு நடைபெற்றது.
இப்பயிற்சி பட்டறைக்கு வருகை தந்திருந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் Dr. லக்ஷ்மணன் வரவேற்றார்.
மாணவர்கள் இது போன்ற பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி தெரிவித்தார்.
இந்த பயிற்சி பட்டறையின் ஒரு பகுதியாக "தொழில் முனைவு மற்றும் விவசாய மருத்துவம்" என்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக Megha Group of Business நிறுவனர் S. புவனேஸ்வரி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் NABARD நிறுவனத்தின் வருகை பேராசிரியர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வேளாண் துறையின் புதிய முயற்சிகள் மற்றும் வளர்ச்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.
மதிய வேளையில் கருத்தரங்கில் பேசிய சிறப்பு விருந்தினர் செல்வகுமார், நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர், Greeno Tech Solutions, கோவை இந்த துறைசார்ந்த ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் வாய்ப்புக்கான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இந்த கருத்தரங்கில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
இறுதியாக தேசிய கீதத்துடன் கருத்தரங்கு நிறைவு பெற்றது.
Related stories
News
Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education
03 Sept 2026
Videos
Park College நிலமட்ட திறன் மேம்பாட்டை வலுப்படுத்த Delphi-TVS Technologies உடன் MoU கையொப்பமிட்டது
12 Nov 2025
Videos
Park College of Engineering Anna University மண்டலம் 9 ஹாக்கி ஆண் போட்டியில் இரண்டாம் பரிசு
28 Sept 2025
Videos
Park College மாணவர்கள் பூமி தினம் 2025 கொண்டாடினர்;誓いமற்றும் மரம் நட்ட பணி
24 Apr 2025
Videos
Park College, KVM MEDTECH உடன் உடன்படிக்கை கையெழுத்திட்டு உயிர் மருத்துவ பொறியியல் வெளிப்பாடு வலுப்படுத்த
17 Apr 2025
Videos
Park College பூமிக சாம்பியனிப்பு சட்டை வென்றது TCE ஆண்டாளர் கிரிக்கெட் சாம்பியனிப்பு
09 Apr 2025